SuperTopAds

அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளுக்கு இழப்பீடா?

ஆசிரியர் - Editor I
அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளுக்கு இழப்பீடா?

 


முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் திட்டமிட் ட சிங்கள குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்பட்டுள்ளது. மேற்படி காணிகளை மீள வழங்கவேண்டும் என தமிழ் மக்கள் கேட்டுவரும் நிலையில் அந்தக் காணிகளுக்கான இழப்பீட்டை வழங்கலாம். என இ ந்த நல்லாட்சி அரசும் அதன் அரச உத்தியோகஸ்த்தர்களும் கூறுவது கோபத்தை உண்டாக்குகின்றது.

மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார். விடயம் தொடர்பாக மாகாணச பை உறுப்பினர் நேற்று ஊடகங்களுக்கு தகவல் தருகையில், தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 2534 ஏக்கர் விவசாய நிலம் திட்டமிட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்பட்டுள்ளது. இதுபோ தாதென்று மேலும் 3336 சிங்கள குடும்பங்களை தமிழ் மக்களுடைய நிலங்களில் குடியேற்றுவதற்கு முய

ற்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காகவே ஹிபுல் ஓயா திட்டம் உருவாக்கப்படுகின்றது. இந்த ஹிபுல் ஓயா திட்டமும் கூட தமிழ் மக்களுக்கு சொந்தமான நீர்பாசன குளங்களை அபகரித்தே மேற்கொள்ளப்ப டுகின்றது. ஆனால் தமிழ் மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தங்களுடைய காணிகளை விட்டுக் கொடுக்க தயாராக இல்லாததுடன், தமது காணிகளை பெற்றுக் கொடுக்கும்படி தொடர்ச்சியாக எங்களிடம் கேட்டு

க் கொண்டிருக்கின்றார்கள். நிலை இவ்வாறிருக்க மக்களுடைய காணிகளுக்கு இழப்பீட்டை வழங்குவ தற்கு தயாராக உள்ளதாக இந்த நல்லாட்சி அரசாங்கம் என தன்னை தானே கூறிக்கொள்ளும் அரசா ங்கமும், அதன் அரச அதிகாரிகளும் கூறுகிறார்கள். இது மக்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை உண்டாக் கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கடந்த மாதம் 26ம் திகதி நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்

கிணைப்பு குழு கூட்டத்திலும பின்னர் இம் மாதம் 12ம் திகதி நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களிலும் மிக தெளிவாக பேசியுள்ளதுடன், மக்களுடைய காணிகளில் ஒரு துண்டை கூட வழங் கமாட்டோம் என கூறியுள்ளோம். குறிப்பாக காணியை தமிழ் மக்களிடம் திருப்பி கொடுக்காவிட்டால் மக் களுக்கு அது என்றைக்காவது ஒருநாள் திருப்பி கிடைக்கும் என்பதையும் கூறியுள்ளோம். எனவே இந்த

விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட எல்லை கிராம மக்கள் சார்பில் கடிதம் ஒன்றை பெற்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன், தமிழ்தேசிய கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அந்த கடிதத்தில் இ ழப்பீடு தேவையில்லை. காணிகளே தேவை என்பதை மக்கள் நிச்சயமாக கூறுவார்கள். அதனடிப்படை

யில் பொறுப்புவாய்ந்தவர்கள் மக்களுடைய காணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண் டும் என்றார்.