SuperTopAds

இந்திய – சீன எல்லையில் மீண்டும் திடீர் மோதல்!! -இரு நாட்டு படைகளுக்கும் காயம்-

ஆசிரியர் - Editor II
இந்திய – சீன எல்லையில் மீண்டும் திடீர் மோதல்!! -இரு நாட்டு படைகளுக்கும் காயம்-

சீன மற்றும் இந்திய படைகளிடையே சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல் இடம்பெற்றுள்ளது. இம்மோதல் சம்பவத்தில் இரு தரப்பிலும் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிக்கிமில் உள்ள நாகுலா கணவாய் என்ற இடத்தில் சீன படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீற முயன்றபோது இந்த மோதல் வெடித்ததாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் சீனா எந்தக் கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


×இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.