SuperTopAds

ஜோ பைடன் பதவியேற்பு விழாவிற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்!! -அதிரடியாக கைது செய்த பொலிஸார்: 509 தோட்டாக்களும் மீட்பு-

ஆசிரியர் - Editor II
ஜோ பைடன் பதவியேற்பு விழாவிற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்!! -அதிரடியாக கைது செய்த பொலிஸார்: 509 தோட்டாக்களும் மீட்பு-

ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழா நடைபெறம் நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் 46 ஆவது ஜனாதிபதியாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.

ஜோ பைடனின் பதவியேற்பு விழாவும் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது. பதவியேற்பு விழாவின் போதும் பாராளுமன்றத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாராளுமன்ற தொகுதி முழுவதுமே பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பதவியேற்பு விழா நடக்கும் அரங்கம் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் வடக்கு பகுதிக்குள் நுழைய கார் ஒன்று வந்தது.

அந்த காரை மறித்த பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். இதன் போது பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ளதாகவும், அதற்கான அழைப்பிதழையும் அந்த நபர் காண்பித்துள்ளார். 

அந்த அழைப்பிதழை ஆய்வு செய்த பொலிஸார், அந்த அழைப்பிதழ் போலியானது என கண்டுபிடித்தனர். பின்னர், அந்த காரை சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 509 தோட்டாக்கள் இருந்ததை கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.‌

உடனடியாக, கார் ஓட்டி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் வெர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த வெஸ்லி அலேன் பிலியர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.