தமிழக வீரர் நடராஜனை ஓதுக்கிவிட ஆரம்பித்த இந்திய!! -சிட்னி டெஸ்டில் இடம் இல்லை-

ஆசிரியர் - Editor II
தமிழக வீரர் நடராஜனை ஓதுக்கிவிட ஆரம்பித்த இந்திய!! -சிட்னி டெஸ்டில் இடம் இல்லை-

அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது. 

இந்நிலையில் 3 ஆவது டெஸ்ட் சிட்னியில் நாளை நடைபெறவுள்ள நிலையில் அதில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி ரகானே (அணித்தலைவர்), ரோகித் சர்மா (துணைத் தலைவர்), சுப்மான் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிசப் பாண்ட், ஜடேஜா, அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், நவ்தீப் சைனி ஆகியோருடைய பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியில் அறிமுக வீரராக நவ்தீப் சைனி நாளை களமிறங்குகின்றார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ரி-20 போட்டிகளில் அபாரமாக விளையாடிய தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Radio