பிரமிக்கும் வசதிகளுடன் சாம்சங் பிளாக்சிப் ஸ்மார்ட்போன்!! -பொங்கலுக்கு அறிமுகம்-

ஆசிரியர் - Editor II
பிரமிக்கும் வசதிகளுடன் சாம்சங் பிளாக்சிப் ஸ்மார்ட்போன்!! -பொங்கலுக்கு அறிமுகம்-

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பிளாக்சிப் ஸ்மார்ட்போன் பொங்கல் பண்டிகையான 14 ஆம் திகதி அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் போது கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகமாக உள்ள பிளாக்சிப் ஸ்மார்ட்போன்கள் முற்றிலும் புது வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் வைலட், கிரே, வைட் மற்றும் பின்க் போன்ற நிறங்களிலும், எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன் வைலட், சில்வர் மற்றும் பிளாக் நிறங்களிலும், எஸ்21 அல்ட்ரா மாடல் சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

புதிய கேலக்ஸி எஸ்21 மற்றும் எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் 8 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி வெர்ஷன்களிலும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வெர்சன்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எஸ் பென் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது விரும்புவோர் தேர்வு செய்யும் அக்சஸரீயாக இது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு