A-09 வீதி ஓரத்தில் நின்ற பாலை மரம் அடியோடு சாய்ந்தது..! மயிரிழையில் தப்பிய பயணிகள் பேருந்து, அரை மணி நேரம் போக்குவரத்து தடை.

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக ஏ -09 வீதியில் நின்ற பாலை மரம் அடியோடு சாய்ந்ததில் வீதியால் சென்ற பேருந்து மயிரிழையில் தப்பியுள்ளபோதும் முன்புற கூரை சேதமடைந்துள்ளது. 

பாலைமரம் அடியோடு சாய்ந்ததில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

6 மணியளவில் குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரச பேருந்து நூலிழையில் விலத்தியதால் 

பயணிகள் மிகப் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துள்ளனர். சரிந்து வீழ்ந்த மரத்தின் கிளைகள் பேருந்தில் வீழ்ந்திருக்கின்றன. 

மரத்தினை அகற்றும் நடவடிக்கையினை கரைச்சி பிரதேசசபை முன்னெடுத்திருந்தது. தற்போது போக்குவரத்து இயல்புக்கு திரும்பியுள்ளது. 

இவ்வாறான இடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அரச மர கூட்டுத்தாபனம் அசமந்த போக்கில் இருப்பது தொடர்பில் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு