யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் 5 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் 5 பேருக்கு தொற்று உறுதி..

கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் சுமார் 186 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் வடமாகாணத்திற்கு வெளியிலிருந்து வந்த 5 பேருக்கு தொற்று உறுதியானது. 

இதில் மன்னார் - மடு மற்றும் முசலி பிரதேசங்களில் 4 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

Radio