SuperTopAds

மீண்டும் வடகிழக்கு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..! “நிவர்” பாரிய சூறாவளியாக மாறுகிறது, கரையோர பகுதி மக்களுக்கு அவதானம்..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கு கிழக்காக 290 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருக்கும் “நிவர்” சூறாவளி அடுத்த 36 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக விருத்தியடையவுள்ளதாக கூறியிருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம், 

வடகிழக்கு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கரையோர பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ளவேண்டும். என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறிப்பாக காங்கேசன்துறையிலிருந்து 160 கிலோ மீற்றர் வரையில் 

நிவர் புயல் நெருங்கிவரும் என எச்சரித்திருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம், கடலில் சுமார் 2 தொடக்கம் 3 மீற்றர் உயரமான அலைகள் உருவாகும். எனவும் கடலில் 80 தொடக்கம் 100 கிலோ மீற்றர் வேகமாக காற்று வீசும் எனவும் எச்சரித்துள்ளதுடன், 

மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் கேட்டுள்ளது.