தியாகம், சஹிப்புத் தன்மை, தயாள குணம், மனஉறுதி போன்றவற்றின் மூலம் உலகை வெல்வோம்

தியாகம், சஹிப்புத் தன்மை, தயாள குணம், மனஉறுதி போன்றவற்றின் மூலம் உலகை வெல்வோம் -சமூக செயற்பாட்டாளரும் நாபீர் பவுண்டேஷன் நிறுவனமான சட்டத்தரணி உதுமான்கண்டு நாபீர்
உலகெங்கும் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தியாகம், சஹிப்புத் தன்மை, தயாள குணம், மனஉறுதி போன்றவற்றின் ஊடாக உலகை வெல்ல வேண்டும்” என சமூக செயற்பாட்டாளரும் நாபீர் பவுண்டேஷன் நிறுவனமான சட்டத்தரணி உதுமான்கண்டு நாபீர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:-
இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ் கடமையை செவ்வனே நிறைவேற்றி, இன்று தமது குடும்பங்களோடு தியாகத்திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கம் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது இதயங் கனிவான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.இன்று உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் முஸ்லிம்களாகிய நாம் ஹஜ் எமக்குக் கற்றுத்தந்த தியாக வரலாற்றை உணர்ந்து செயற்பட வேண்டும்.
நபி இப்றாகீம் ( அலை), நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் இறை நம்பிக்கை, மனஉறுதி, தியாகம், பொறுமை, சஹிப்புத் தன்மை ஆகியவற்றை நம் வாழ்விலும் கைக் கொள்வோமாயின் வெற்றி நிட்சயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித இஸ்லாம் தெளிவாக காட்டியுள்ளது. அனைத்து மக்களுடன் இன மத வேறுபாடுகளின்றிசகோதர வாஞ்சையுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என குறிப்பிடுகிறது. இதற்கமைய அனைத்து சமூகங்களுடனும் சகோதரத்துடன் வாழ்ந்து எம் சமூகத்தின் உயர்வுக்காக பாடுபட இந்த நன்நாளில் முன்வரவேண்டும்.இந்த வகையில் எம்மிடையே எவ்வித சோதனைகள் வந்தாலும் சமூகத்தின் நலன்களை பாதிக்காத தூரநோக்குள்ள தீர்மானங்களேயே நாம் எடுக்க வேண்டும் எழுந்த மானத்தில் எடுக்கபடும் முடிவுகளும் உணர்ச்சியான கருத்துக்களும் மாத்திரம் எம் சமூகத்தின் முழு நலனையும் வென்றுவிட முடியாது என்பதை மனதிற்கொள்ள வேண்டும்.
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த பொறுமையை கடைப்பிடித்து ஏனைய சமூகங்களுடனான நல்லுறவுகளை கட்டிக்காத்து நம் நமூகத்தின் தேவைகளை புத்திசாதுரியமாக அடைந்து கொள்ள இந்த நன்நாளில் உறுதி பூணுவோமாக இந்த தியாக திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சசோகதரர்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த திருநாள் நம் அனைவரினதும் சந்தோச வாழ்விற்கு இட்டுச்செல்ல வேண்டும் என வல்ல நாயனை பிராத்திக்கின்றேன்
அத்துடன் இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் அனைவருக்கும் பூரணமான ஹஜ்ஜாக இறைவன் ஆக்கவும்இ ஏனையவர்களுக்கு வரும் வருடங்களில் ஹஜ் கடமையை செய்யும் பெரும் பாக்கியத்தை தரவும் இந்த நன்னாளில் இறைவனிடம் கையேந்துவோம் என சமூக செயற்பாட்டாளரும் நாபீர் பவுண்டேஷன் நிறுவனமான சட்டத்தரணி உதுமான்கண்டு நாபீர் தமது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கேட்டுள்ளார்.