SuperTopAds

மங்கள வாத்திய இசையுடன் சிறுப்பிட்டியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

ஆசிரியர் - Editor II
மங்கள வாத்திய இசையுடன் சிறுப்பிட்டியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை சிறுப்பிட்டி மேற்கு ஜனசக்தி சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

மாவீரர்களின் பெற்றோர் , உரித்துடையோர் மாவீரர்களின் படங்களை தாங்கியவாறு மங்கள வாத்திய இசையுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் 

தொடர்ந்து பொதுச்சுடரை மாவீரர் அகசேரனின் தாயார் கனகலிங்கம் கிருஷ்ணமலர் ஏற்றியதை தொடர்ந்து, மாவீரர்களின் பொது திருவுருவ படத்திற்கான மலர் மாலையை மாவீரர் எழிலரசனின் தாயாரான நாகமணி கமலா அணிவித்தார் 

அதனை தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவ படங்களின் முன் சுடரேற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினரால் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.


Radio