SuperTopAds

மன்னாரில் 351 குடும்பங்களை சேர்ந்த 870 பேர் பாதிப்பு ;14 வீடுகள் பகுதி அளவில் சேதம்

ஆசிரியர் - Editor II
மன்னாரில் 351 குடும்பங்களை சேர்ந்த 870 பேர் பாதிப்பு ;14 வீடுகள் பகுதி அளவில் சேதம்

வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 351குடும்பங்களை சேர்ந்த 870 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என் சூரியராஜா தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில் மன்னார் நகரப் பகுதியில் 11 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 284 குடும்பங்களைச் சேர்ந்த 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று மாந்தை மேற்கு கூராய் மற்றும்  சீதுவை விநாயகர் குளம் பகுதிகளைச் சேர்ந்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 161 பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்களை இலுப்பக்கடவை   தமிழ் கலவன் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Radio