லங்கா பிரிமீயர் லீக்: காலி கிளாடியேட்டர்ஸ் அணித் தலைவராக ஷாகித் அப்ரிடி!!

ஆசிரியர் - Editor II
லங்கா பிரிமீயர் லீக்: காலி கிளாடியேட்டர்ஸ் அணித் தலைவராக ஷாகித் அப்ரிடி!!

இலங்கை கிரிக்கெட் போர்டால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லங்கா பிரிமீயர் லீக் பல தடைகளை தாண்டி 26 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இதில் விளையாடும் 5 அணிகளில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியும் ஒன்று.

காலி அணியின் தலைவாக பாகிஸ்தானைச் சேர்ந்த சர்பராஸ் அகமது நியமிக்கப்பட்டிருந்தார். பாகிஸ்தான்  அணி நியூசிலாந்து சென்று டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான பாகிஸ்தான் அணியில் சர்பராஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால் காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் இருந்து சர்பராஸ் அகமது விலகியுள்ளார். இந்நிலையில் ஷாகித் அப்ரிடி அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

லங்கா பிரிமீயர் லீக்கில் இருந்து கெய்ல், டு பிளிஸ்சிஸ், லியம் பிளாங்கெட், தாவித் மலன், லிசித் மலிங்கா, கம்ரான் அக்மல், வஹாப் ரியாஸ், முகமது ஹபீஸ் போன்றோரும் விலகியுள்ளனர்.


Radio