ஐ.பி.எல் போட்டியில் மேலும் ஒரு அணி சேர்ப்பு!! -அந்த அணியை ஏலம் எடுத்த மோகன்லால்-

ஆசிரியர் - Editor III

ஐ.பி.எல் தொடரில் மேலதிகமாக ஒரு அணி இணைக்கப்படவுள்ள நிலையில் அந்த அணியை நடிகர் மோகன்லால் வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளன. ஐ.பி.எல் தொடரில் 8 அணிகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் எதிர்வரும் ஆண்டில் இருந்து மேலதிகமாக ஒரு அணி சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், அந்த புதிய அணியை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை நேரில் கண்டு ரசித்த நடிகர் மோகன்லால், இதுகுறித்த பணிகளுக்காக தான் துபாய் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே ஷாருக் கான், ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா ஆகிய திரையுலக பிரபலங்கள் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Radio