இ.ஆனோல்ட்டை மேயராக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் விடாப்பிடி

ஆசிரியர் - Editor I
இ.ஆனோல்ட்டை மேயராக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் விடாப்பிடி

யாழ்.மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கும், இமானுவேல் ஆனோல்ட்டை மேயராக்குவதற்கு ம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். என தமிழ்தேசிய கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், கூட்டமைப்பின் பங்காளி கட்சி ஒன்றின் முக்கியஸ்தர்கள் சிலரும் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பு யாழ்.மாநகரசபையில் ஆட்சியமைக்க ஈழமக்கள் ஜனநாயக கட்சி அல்லது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவினை பெறவேண்டிய நிலை காணப்படுகி றது. இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் சிலர் தமக்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளதாகவும், இதனால் இரகசிய வாக்கெடுப்பை தாம் கோருவோம் என த

மிழ்தேசிய மக்கள் முன்னணி கூறிவருகின்றது. ஆனால் இரகசிய வாக்கெடுப்பு தேவையற்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக மறுத்துவருகின்றது. இதற்கிடையில் ஆட்சிய மைக்கும் கட்சிக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்க தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சி மு ன்னர் அறிவித்திருந்தபோதும், பின்னர் இமானுவேல் ஆனோல்டை மேயராக தமிழ்தேசிய கூட் 

டமைப்பு நிறுத்தினால் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கமாட்டோம் என ஈழமக்கள் ஜனநாயக க ட்சி கூறியுள்ளது. இந்நிலையில் இமானுவேல் ஆனோல்ட்டை மேயராக்கி யாழ்.மாநகரசபையி ல் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவேண்டும் எனவும், அதற்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். எனவும் தமிழ்தேசிய

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தொடர்ச்சியாக கூட்டமைப்பின் தலi மக்கு அழுத்தம் கொடுப்பதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. எனினு ம் கூட்டமைப்பில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், மேற்படி இரு நாடாளுமன்ற உறுப்பினர்களினது கோரிக்கைக்

கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி ஒன்றின் முக்கியஸ்த்தர்கள் சிலரும் கூட இமானுவேல் ஆனோலட்டை மேயராக்க தமிழ்தேசி ய கூட்டமைப்பு ஈழமக்கள் ஜனநாய கட்சியுடன் பேசவேண்டும் என கேட்டுள்ளார்கள். எனி னும் கொள்ளைரீதியாக உடன்பாடற்ற ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த இயலாது என 

கூட்டமைப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளார்கள் எனவும், அந்த தகவ ல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்று அவசரமாக கூடவுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த விடயமும் பிரதானமாக ஆராயப்படும் கூட்டமைப்பின் கட்சி வட்டார தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு