SuperTopAds

16ம் திகதியுடன் நாடு முடக்கலில் இருந்து முற்றாக விடுபடும்..! ஒரு வாரத்திற்குள் ஆபத்து அதிகரித்தால் அப்போது முடிவுகள் மறலாம்..

ஆசிரியர் - Editor I

கொரோனா பரவல் அபாயம் காரணமாக நாட்டில் முடக்கப்பட்டிருக்கும் நகரங்கள், பிரதேசங்கள் எதிர்வரும் 16ம் திகதி விடுவிக்கப்படும் என இராணுவ தளபதியும், கொவிட் -19 எதிர்ப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

எவ்வாறாயினும் இந்த ஒரு வாரத்துக்குள் ஏதேனும் ஒரு பகுதியில் ஆபத்து அதிகரிக்குமாக இருந்தால், அது குறித்து தீர்மானம் அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மாறுபடும் என அவர் சுட்டிக்காட்டினார்.‘ உண்மையில் ஊரடங்கு நிலையை நீக்கி, இந்த பகுதிகள் முடக்கப்பட்டமை நினைத்தவாறு எடுக்கப்பட்ட முடிவல்ல. 

அப்பகுதிகள் தொடர்பிலான பி.சி.ஆர். பகுப்பாய்வுகள், உளவுத்துறை அறிக்கைகள், அந்தந்த பிரதேச மக்களின் நடவடிக்கைகளை மையப்படுத்தி கொரோனா தொற்று பரவலுக்கான அபாயம், அதிக சாத்தியக் கூறுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டே 

முடக்கப்பட்ட பகுதிகள் அவ்வாறான நிலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டன என்றார்.