இலங்கையின் மொத்த சனத்தொகையில் 20 வீதமானோருக்கு கொவிட் - 19 தடுப்பூசி வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கமாம்..!
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறியுள்ளார்.
இந்நிலையில் கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குழுவொன்றை நியமித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசி தொடர்பான கலந்துரையாடலில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மருத்துவர் ரசியா பெண்ட்சே உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமான மக்களுக்கான தடுப்பூசியை வழங்க இணங்கியதை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தடுப்பூசி தொடர்பான தீர்மானம், வளமுகாமைத்துவம், தகவல் பெறுதல் போன்றவற்றுக்கான குழுவை சுகாதார அமைச்சர் நியமித்துள்ளார்.