SuperTopAds

யாழ்.நகர அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதி திரும்பி செல்லும் நிலை..! பொறுப்புவாய்ந்தவர்களின் அசமந்தம்..

ஆசிரியர் - Editor I

சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் யாழ்.நகரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் செயற்படுத்தப்படும் யாழ்.தந்திரோபாய அபிவிருத்தி திட்டத்தின் பெரும் பங்கு நிதி திரும்பிச் செல்லும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

உலக வங்கியின் அனுசரணையுடன் செயல்படுத்தப்படும் குறித்த திட்டம் யாழ்.நகரை அழகுபடுத்தும் முகமாக நான்கு பிரதான அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது யாழ்.நகர வடிகாலமைப்பு திட்டம்,

குளங்கள்ஆழமாக்குதல், நகரை அழகுபடுத்துதல் மற்றும் யாழ்.மாநகர இயலளவு அபிவிருத்தி ஆகிய பிரிவுகளின் கீழ் குறித்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.குறித்த திட்டங்களில் ஓரிரு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில் 

ஏனைய திட்டங்கள் உரிய திட்டமிடல்கள் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஒரு வருடத்தை கொண்டதாக குறித்த திட்டம் எதிர் வரும் 2021 ஆண்டில் நிறைவடைய உள்ள நிலையில் இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த திட்டங்கள் தயார் செய்யப்பட்டு 

உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். எனினும் 30 வீதமான திட்டங்கலே பூர்த்தி அடைந்துள்ளதாக அறியப்படும் நிலையில் குறித்த திகதிக்குள் தயாரிக்கப்படாத பல திட்டங்களுக்கான பெருமளவு நிதி திரும்பிச் செல்லும் நிலையை எதிர் நோக்கியுள்ளது.

ஆகவே யாழ்ப்பாண மக்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டம் கைநழுவிப் போகாமலிருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.