கொழும்பு, ஹம்பகா மாவட்டங்களுக்கு செல்வதை முற்றாக தவிருங்கள்..! இப்போதும் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். இராணுவ தளபதி எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

நாட்டில் தற்போதைய சுழலில் மிக மிக அத்தியாவசிய தேவையில்லாமல் கொழும்புக்கு வருவதை முற்றாக தவிர்க்குமாறு இராணுவ தளபதியும், கொரோனா எதிர்ப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், நாட்டில் அதிகளவான நோயாளர்கள் கொழும்பு, ஹம்பகா மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். எனவே மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும். 

மேலும் கொழும்பு, ஹம்பகா மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்ந்தும் கண்டுபிடிக்கப்படுகின்றார்கள். எனவே நாட்டின் எந்த பகுதியிலும் கொரோனா தொற்று அபாயம் உள்ளது என்பதை மக்கள் உணரவேண்டும்.

எனவே சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பூரணமாக கடைப்பிடிப்பதுடன், மாவட்டங்களுக்கிடையில் மிக மிக அத்தியாவசிய தேவை என்றால் மட்டும் பயணிக்குமாறும், தேவையற்ற பயணங்களை முற்றாக தவிர்ப்பதே சிறந்தது என அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு