தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்: யாழ் பல்கலையில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்!

ஆசிரியர் - Editor II
தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்: யாழ் பல்கலையில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63 ஆவது பிறந்த நாள் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டுள்ளது.

மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு இன்று முற்பகல் 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்துக்குள் இடம்பெற்றது.

தமிழீழத்தை சித்தரிக்கும் வகையில் பிறந்த நாள் கேக் அமைந்திருந்தமை சிறப்பம்சமாக விளங்கியுள்ளது.

அத்துடன் தலைவர் வே.பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு உட்பட வளாகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு