யாழ்ப்பாணத்திலிருந்து கடல்வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது..!
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா -தமிழகம் வேதாரண்யம் கோடிக்கரைக்கு படகு மூலம் சென்ற கணவன், மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் இந்திய கரையோர பாதுகாப்பு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சென்றவர்கள் திரிகோணமலை பகுதியை சேர்ந்த 45 வயதான முகமது அன்சாரி, அவரது மனைவியான 35 வயதுடைய சல்மா பேகம் மற்றும் அவர்களது 10 வயது மகனான அன்ஸார் ஆகியோரே கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.
குறித்த மூவரும் படகு மூலம் இந்தியாவின் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் சவுக்கு காட்டில் வந்து இறக்கிய நிலையில், இந்திய கடலோர காவல் படையினர் கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.