23 வயதான இளைஞன் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..! நீரிழிவு நோயாளி என தகவல், 30 ஆக உயர்ந்தது உயிரிழப்பு..
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 23 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
மினுவாங்கொட பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 3 வாரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளார். முகத்துவாரத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு
தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். அவர் நீரிழிவு நோயாளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த ஜனவரி முதல் 12 ஆயிரத்து 970 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 ஆயிரத்து 186 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர்.