SuperTopAds

போலியான முகவரியை வழங்கி தனியார் வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்த நபருக்கு கொரோனா..! அடையாளம் காண முடியாமல் திணறும் சுகாதார பிரிவு..

ஆசிரியர் - Editor I

போலியான முகவரியை வழங்கி தனியார் வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

போலியான தகவலை வழங்கிய காரணத்தால் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவரை சுகாதார அதிகாரிகளினால் கண்டறிய முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்தி, 

பிரதேச சுகாதார அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும், வைத்தியசாலை செல்வது நல்லதல்ல என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.