மீன் வியாபாரிகள் கத்தும்போது வெளியாகும் எச்சில் மற்றும் பண தாள்களே இலங்கையில் மிகப்பெரும் கொரோனா கொத்தணி உருவாக காரணம்..! கண்டுபிடிக்கப்பட்டது..
கொழும்பு - பேலியகொட மீன் சந்தையிலிருந்து நாட்டில் மிகப்பெரும் கொரோனா கொத்தணியான பேலியகொட கொத்தணி உருவானது எவ்வாறு என அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
பணத்தாள் மற்றும் மீனவர்களால் சத்தமிடும்போது வெளியாகும் எச்சில் போன்றவற்றால் கொரோனா பி- 1.42 ரக தொற்றுப் பிரிவு பரவியிருக்கின்றது என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மினுவங்கொடை கொரோனா கொத்தணி கடந்த மாதம் 3ஆம் திகதி பரவ ஆரம்பித்தது. எனினும், அதனை மிஞ்சிய பேலியகொட மீன்சந்தைக் கொத்தணி கடந்த மாதம் 21ஆம் திகதி பரவ ஆரம்பித்து
பாரியளவில் வியாபித்துள்ளது. இந்த நிலையில், மினுவங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை
எட்டாயிரத்து 709ஆக அதிகரித்துள்ளது.இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 187ஆக அதிகரித்துள்ளது.