கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஆசிரியர் - Admin
கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சுத்தமான தண்ணீர், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட்டால் கோடைகாலத்தில் ஏற்படும் நோய்பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஏப்ரல், மே மாதங்கள் தான் வழக்கமாக கோடைகாலம் என குறிப்பிடப்படுகிறது. ஆனால் தமிழகம் முழுவதும் தற்போது இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் இவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடைகாலம் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். அப்போது பொதுமக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளும் ஏற்படும். கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள் குறித்தும், நோய் பாதிப்பு ஏற்படாமல் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.

கோடைகாலத்தில் அம்மை நோய், மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு மற்றும் தோல் பிரச்சினைகளே அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை தடுக்க வேண்டும் என்றால் சுத்தமான தண்ணீர், இளநீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். மேலும் நீர்சத்து உள்ள பழங்களையும் சாப்பிடலாம்.

ஒருவேளை நோய் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான சிகிச்சைகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது தவிர தோல் பிரச்சினை ஏற்படாமல் இருக்க வெயில் நிலவும் சமயங்களில் வெளியே செல்லாமல் இருக்க வேண்டும். கருப்புநிற ஆடைகளை அணியக்கூடாது. வெள்ளைநிற ஆடைகளை அணியலாம்.

சுத்தமற்ற தண்ணீரை குடிப்பதாலும், வெயிலின் காரணமாகவும் மஞ்சள்காமாலை நோய் ஏற்படுகிறது. எனவே குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும். பின்னர் அதனை குடிக்கலாம். உடலில் வெப்பம் அதிகரிக்காமல் இருக்க தினசரி 2 முறை குளிப்பது நல்லது. அதே போல் ஆடு, கோழி, மீன் இறைச்சிகளை கோடைகாலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

மேலும் சாலையோர கடைகளில் விற்கப்படும் ‘பாஸ்ட் புட்’ உணவு வகைகளையும் சாப்பிடக்கூடாது. இவற்றால் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், கஞ்சி உள்ளிட்ட எளிதில் செரிமானம் ஆக கூடிய சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு