பிறந்து 13 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி..! குழந்தையின் தாய், தந்தை, தாத்தா, பாட்டிக்கும் கொரோனா..
பிறந்து 13 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
ஹப்புத்தள - கொஸ்லந்தை பகுதியிலேயே 13 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியானது.
குழந்தையின் தாய், தந்தை, மற்றும் பாட்டி ஆகியோருக்கு தொற்றுதியாகியுள்ளது.
இவர்கள் அண்மையில் கம்பஹாவில் இருந்து கொஸ்லாந்தை பகுதிக்கு சென்றுள்ளனர்.
குழந்தையின் தாத்தாவிற்கு கொழும்பில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவர் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர் என பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.