SuperTopAds

ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9ம் திகதிவரை தொடரும்..! கொரோனா பரவல் தீவிரம், இராணுவ தளபதி விசேட அறிக்கையில்.. (தொடரும் மேலதிக இணைப்புகள்..)

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9ம் திகதிவரை தொடரும்..! கொரோனா பரவல் தீவிரம், இராணுவ தளபதி விசேட அறிக்கையில்.. (தொடரும் மேலதிக இணைப்புகள்..)

கொரோனா தொற்று பரவல் காரணமாக மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9ம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்பொருட்டு, ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட 68 பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட 68 பொலிஸ் பிரிவுகளில் முன்னதாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இணைப்பு..

மேல் மாகாணத்தை தவிர, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட பொலிஸ் பிரிவு, குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் நகர் மற்றும் குளியாபிட்டிய பொலிஸ் பிரிவு ஆகியவற்றிற்கும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஊரடங்கு தொடரும்.

இணைப்பு..

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் மற்றைய மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாது.

இணைப்பு..

கொரோனா தொற்று தொடர்பிலான பி.சி.ஆர் பரிசோதனைகள் குறித்த தகவல்களை அறிந்துக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கம் அறிவிப்பு : 0117966366நீங்கள் வீட்டிற்கு அழைத்து PCR பரிசோதனை மேற்கொள்ளலாம். பரிசோதனை முடிவுவரை வீட்டில் இருந்து வெளியேற கூடாது.