தொழில் அதிபரை மணந்தார் காஜல் அகர்வால்!! -எளிமையான திருமணம்-
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையைக வலம் வந்த நடிகை காஜல் அகர்வாலின் திருமணம் மும்பையில் மிகவும் எளிமையாக நடந்தது.
காஜல் அகர்வாலுக்கு தொழில் அதிபர் கவுதம் கிட்சுலு என்பவருக்கும் திருமணம் முடிவானது. இந்தநிலையில் காஜல் அகர்வாலுக்கும் கவுதமுக்கும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மும்பையில் எளிமையாக திருமணம் நடந்தது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அழைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் முன்னிலையில் காஜல் அகர்வால் கழுத்தில் கவுதம் தாலி கட்டினார். அனைவரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர். நடிகர்-நடிகைகள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை பதிவு செய்தார்கள். திருமணத்துக்கு பிறகும் காஜல் அகர்வால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்து உள்ளார்.