PCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது..! சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றை இனங்காணும் PCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுதடைந்துள்ளதாக கூறியிருக்கும் இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா, 

பழுதடைந்த இயந்திரங்களை திருத்துவதற்கு சீனா பொறியியலாளர் ஒருவர் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும் இராணுவ தளபதி கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

20 நாள்களுக்கு 24 மணி நேரமும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அவை செயலற்றதாக இருந்திருக்கலாம் இயந்திரங்களைச் சீர்செய்ய தொழில்நுட்பவியலாளர்கள் பெரும் முயற்சி செய்தார்கள், 

ஆனால் அது வெற்றிபெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார். பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களைச் சீர்செய்ய சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர் ஒருவரை அழைத்து வர வேண்டும். 

தற்போது இராஜதந்திர மட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் நாளை இலங்கைக்கு வருகை தருவார்.சீன தொழில்நுட்பவியலாளர் தனிமைப்படுத்தலின் கீழ் 

பிசிஆர் இயந்திரங்களை சீரமைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு