ஆம் அபாயத்தில் இருக்கிறோம்..! ஊரடங்கு பலனளிக்கவில்லை, உண்மையை ஒப்புக்கொண்டார் இராணுவ தளபதி சவேந்திர சில்வா..
கொரோனா பரவல் காரணமாக கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாயநிலை உள்ளமை வெளிப்படையானது. என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் இது குறித்து உறுதியாக எதனையும் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
கொழும்பின் சில பகுதிகளில் 7 நாள்கள் வரையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொரோனாத் தொற்றுடன் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையை அவதானிக்கும்போது, தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையிலும் நடமாட்டங்கள் இடம்பெற்றுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தால், இவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோதும்
திருமண நிகழ்வொன்றுக்கு சென்ற சம்பவம் கூட பதிவாகியுள்ளது. ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கு மாயின், அவர் தனது வீட்டிலேயே இருப்பாராயின்,
அவரின் வீட்டைச் சார்ந்தவர்களுக்கு தொற்று ஏற்படுமே தவிர வெளிநபர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை , என்றார்.