இன்று மட்டும் 26 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்..! கிழக்கில் அவசர நிலமையினை மக்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என சுகாதார பிரிவு அறிவுறுத்தல்..

ஆசிரியர் - Editor I

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 26 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன. 

பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என தனிமைப்படுத்தப்பட்டு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இன்று காலை வெளியான முடிவுகளின் படி 

மட்டக்களப்பில் - 11 பேரும்

கல்முனை-09 (இவர்கள் கல்முனை, பொத்துவில், நித்தவூர் உள்ளவர்கள்)

திருகோணமலை-06, பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். 

இந்த நிலையினை தீவிரமான கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண மக்கள் சுகாதார ஆலோசனையை பின்பற்றுமாறு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கோரியுள்ளார்.

Radio