​யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட ஆவா குழுவின் உளவாளிக்கு நீதவான் கொடுத்த உத்தரவு!

ஆசிரியர் - Editor II
​யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட ஆவா குழுவின் உளவாளிக்கு நீதவான் கொடுத்த உத்தரவு!

யாழ் பிரதான பஸ் நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் உளவாளியாக செயற்ட்ட நபரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ் நீதவான் எஸ் சதீஸ்கரன் முன்னிலையில் குறித்த நபரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 6ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கோப்பாய் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவங்கள் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஆவா குழுவின் உளவாளியாக செயற்பட்டார் என்று கூறப்படும் இளைஙர் ஒருவர் தப்பிச் செல்வார் என்ற காரணத்தினால் வெள்ளை வானில் சென்று போலிசார் கைது செய்திருந்தனர்.

யாழ் பிறெளண் வீதி 5ம் ஒழுங்கை கலட்டிப் பகுதியைச் சேர்ந்த கஜபாலசிங்கம் நிதர்சன் 16 வயதான இளைஞனே இதில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரின் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளொன்றும் வாளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

16 வயதான குறித்த சந்தேகநபர் கடந்த ஒரு மாதமாக பாடசாலை செல்லாது யாழ் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணிபுரிந்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தடன் தொடர்படைய சந்தேக நபர்களில் சிலர் வெளிமாவட்டங்களுக்கு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்; கோப்பாய் nபோலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு