மேலதிக வகுப்பு நடத்திய ஆசிரியருக்கு கொரோனா..! மாணவர்கள் அடங்கலாக 152 பேர் தனிமைப்படுத்தலில், முதல்கட்ட பீ.சி.ஆர் பரிசோதனை நிறைவு..
பாடசாலையில் மேலதிக வகுப்புக்களை நடத்திய ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவருடை மாணவர்கள் உள்ளடங்கலாக 152 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
குறித்த ஆசிரியருக்கு கடந்த ஞாயிற்று கிழமை தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவரது மைத்துனரிடமிருந்தே அவருக்கு தொற்று உறுதியானது. கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த இராணுவ அதிகாரியொருவரை கம்பஹாவிற்கு ஏற்றி வந்து,
கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சாரதியின் மைத்துனரே இந்த ஆசிரியர். அவர் யக்கல பகுதியில் வசிப்பவர். ஆசிரியருடன் நெருங்கிப்பழக்கிய ஏனையவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.பாடசாலையின் ஊழியர்கள், மாணவர்கள் 52 பேர்
மற்றும் தனியார் வகுப்பில் கலந்து கொண்ட 100 மாணவர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் யாரும் தொற்றுடன் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.