SuperTopAds

மதுபோதையில் ஆற்றில் நிர்வாண குளியல்..! அடித்து முறித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள், தேர்தல் திணைக்கள அதிகாரிகள் 7 பேரும் பணி நீக்கம்..

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் ஆற்றில் நிர்வாண குளியல்..! அடித்து முறித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள், தேர்தல் திணைக்கள அதிகாரிகள் 7 பேரும் பணி நீக்கம்..

மதுபோதையில் ஆற்றில் நிர்வாணமாக குளித்ததுடன் பொதுமக்களுடன் மோதலை ஏற்படுத்திய பொலனறுவை மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள் 7 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்தின் தேர்தல் தொிவத்தாட்சி அலுவலர் டி.ஏ.தர்மசிறி கூறியுள்ளார். 

தேர்தல் முறைப்பாட்டு பிரிவை சேர்ந்த 7 அதிகாரிகள் கலஹகல பிரதேசத்தில் உள்ள ஆற்றுக்கு சென்றுள்ளதாகவும் சம்பவம் நடக்கும் போது அவர் மதுபானம் அருந்தி இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் ஆடையின்றி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, 

கிராமவாசிகள் சிலர் வந்து அவர்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டதால், இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.கிராமவாசிகள் அதிகாரிகளை தாக்கி, அவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் எனவும் தெரிவத்தாட்சி அதிகாரி கூறியுள்ளார்.

இந்த 7 அதிகாரிகளில் ஒருவர், கிராமவாசிகளுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து பொலன்நறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலன்நறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.