SuperTopAds

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க தறிகெட்டு ஓடிய மரக்கடத்தல் கும்பல் விபத்தில் சிக்கியது..! கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம். மரம், வாகனம் மீட்பு..

ஆசிரியர் - Editor I
பொலிஸாரிடமிருந்து தப்பிக்க தறிகெட்டு ஓடிய மரக்கடத்தல் கும்பல் விபத்தில் சிக்கியது..! கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம். மரம், வாகனம் மீட்பு..

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்தி சென்ற வாகனத்தை பொலிஸார் வழிமறிக்க முயன்றபோது தப்பி ஓடிய வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தையடுத்து வாகனத்திலிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் திருவையாறு பகுதியில் இடம்பெற்றள்ளது. கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியிலிருந்து குறித்த மரம் ஏற்றிய வாகனம் பயணித்தபோதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 

சட்டவிரோதமாக குறித்த மரக்குற்றிகள் விற்பனைக்காக எடுத்து செல்லப்படுகின்றமை தொடர்பில் கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக பொலிசார் சோதனை நடவடிக்கையினை மெற்கொண்டிருந்தனர். 

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸ் உப பரிசோதகர் ஜயேஸ் தலைமையிலான குழுவினர் 

குறித்த சோதனை நடவடிக்கையினை மெற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த வாகனம் மரக்குற்றிகளை ஏற்றியவாறு பபயணித்தபோது பொலிசார் கைது செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். 

இந்த நிலையில் குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி திருவையாறு பகுதியில் விபத்துக்குள்ளாகியது. குறித்த வாகனம் மற்றும் ஏற்றி வந்த மர குற்றிகளை பொலிசார் மீட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். 

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு மற்றும் மர கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக பதிவாகிவரும் நிலையில் பொலிசார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.