SuperTopAds

பாடசாலைகள் நாளை ஆரம்பமா..? இல்லையாம், அமைச்சரவை பேச்சாளர் வழங்கியுள்ள பதில்..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகள் நாளை ஆரம்பமா..? இல்லையாம், அமைச்சரவை பேச்சாளர் வழங்கியுள்ள பதில்..

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் நாளை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அடுத்தவாரம் ஆரமபிக்கலாம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன கூறினார். 

கந்தக்காடு மூலம் பரவிய கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவதளபதியும் சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தெரிவித்துள்ளனர் என கூறியிருக்கும் அமைச்சர் பந்துல, 

இதன் காரணமாக பாடசாலைகள் அடுத்த வாரம் மீள ஆரம்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் அமைச்சரவையும் பாடசாலைகள் குறித்து ஆராய்ந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் வைரசினால் பாதிக்கப்படுவார்கள் 

என தெரிவித்து சில தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாணவர்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தலாம் என கல்வியமைச்சர் தெரிவித்த பின்னரே பாடசாலைகளை மூட தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்க சுகாதார வழிமுறைகளை பின்பற்றி 

அடுத்தவாரம் பாசாலைகளை மீள ஆரம்பிக்கும் என அமைச்சர் நம்பிககை வெளியிட்டுள்ளார்.