மிருசுவில் படுகொலையாளிக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு..! நாளை உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலை..

ஆசிரியர் - Editor I
மிருசுவில் படுகொலையாளிக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு..! நாளை உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலை..

யாழ்.மிருசுவில் பகுதியில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான சுனில் ரட்ணாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. 

2000ஆம் ஆண்டு மிருசுவி்ல் பகுதியில் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேரை படையினர் படுகொலை செய்த வழக்குல் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட  சேர்ந்த ரட்ணாயக்காவிற்கு தற்போதைய ஜனாதிபது கோட்டாபாய ராஜபக்ச

மன்னிப்பளித்து விடுதலை செய்திருந்தார். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதனை ஆட்சேபிடத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர் ஒருவரின் சார்பில் சட்டத்தரணி சயந்தன் உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

குறித்த வழக்கு கடந்த மே மாதம் 23ம் திகதி இலத்திரணியல் முறையில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

இதன் போது வரக்காளர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு