மேலும் 90 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது..! திணறும் சுகாதாரத்துறை, 2605 ஆக உயர்ந்த தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை..

ஆசிரியர் - Editor I
மேலும் 90 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது..! திணறும் சுகாதாரத்துறை, 2605 ஆக உயர்ந்த தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 90 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2605 ஆக உயர்ந்திருக்கின்றது. 

இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 90 புதிய கொரோனா தொற்றாளர்களில் 76 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலும் மிகுதி 14 பேர் 

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிப் பழகியவர்களென 

அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று காலை 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நான்கு பேரும் ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 2,605 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு