தமிழ் அரசியல்வாதிகள் பொய்க்குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனராம்! - இராணுவத் தளபதி கூறுகிறார்.
தமிழ் அரசியல்வாதிகள் படையினர் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என்று, இராணுவ தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வடக்கு மட்டுமன்றி, முழு நாட்டின் பாதுகாப்புக்கும் அரச படைகளே பொறுப்பு என்றும், ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 9 மாகாணங்களிலும் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவரையும் அச்சுறுத்தும் விதத்தில் படையினர் செயற்படவில்லை என்று, குறிப்பாக வடக்கில் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் அரச படைகள் செயற்படவில்லை என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் அரசியல்வாதிகள் ஆதாரங்கள் எதுவுமில்லாமல் படையினர் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். இது இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் செயல் என்றும் லெப்டின்ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குற்றம்சாட்டினார்.
தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புடன் நடக்க வேண்டும். என்றும், குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும்" – என்றும் இராணுவத் தளபதி மேலும் வலியுறுத்தியுள்ளார்.