தெற்காசியாவில் இரு நாடுகளுக்கு மட்டும் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய அங்கீகாரம்..! அதில் ஒரு நாடு இலங்கை..
ரூபெல்லா மற்றும் தட்டம்மை ஆகிய நோய்களை முற்றாக ஒழித்த தெற்காசிய நாடுகள் பட்டியலில் இலங்கையும், மாலைதீவும் பதிவாகியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாக இந்த இரண்டு நாடுகளும் ருபெல்லா மற்றும் தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளாக பதிவாகியுள்ளதாக
உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை வௌியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டளவில் தெற்காசிய பிராந்தியத்தில் ருபெல்லா மற்றும் தட்டம்மை நோயை இல்லாதொழிக்க
உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்பார்த்திருந்தது. அதற்கமைய, இலங்கையில் கடைசி தட்டம்மை நோயாளர் கடந்த 2016 ஆம் ஆண்டே பதிவாகியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் ருபெல்லா நோயாளர் பதிவாகியிருந்தார்.அதற்கமைய, ருபெல்லா மற்றும் தட்டம்மை நோயை இல்லாதொழித்த
இரண்டு தெற்காசிய நாடுகளாக இலங்கையும், மாலைத்தீவும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.