பேருந்து பயணிகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி..! தொலைபேசி செயலி(App) அறிமுகம், என்னென்ன வசதிகள் உள்ளது தொியுமா..
இலங்கையில் பயணிகள் பேருந்து சேவையை பயன்படுத்தும் மக்களுக்காக தொலைபேசி “அப்” ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வடிவமைக்கப்பட்ட இந்த செயலியை போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று அறிமுகம் செய்துவைத்தார்.
மைபஸ் (MYBUS-SL) எனும் பெயரில் குறித்த செயலி அறிமுகப்படுத்ததப்பட்டுள்ளதுடன், பயண தூரம், பஸ் கட்டணம் ஆகியவற்றை இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும்.
அத்துடன், ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்தின் ஊடாக பஸ் பயணிக்கும் பகுதியை அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த செயலி மூலம் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் பஸ்களில் முற்பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் Online ஊடாக பணம் செலுத்த முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.
APP டவுண்லோட் செய்ய கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்..
https://play.google.com/store/apps/details?id=com.informatics.NTC