தற்கொலை செய்ய எண்ணினேன்!! -யுவன் அதிர்ச்சி தகவல்-
தமிழ் திரையுலகில் முன்னணியில் உள்ள இசையமைப்பாளர்களின் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாக கூறியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா, சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சம் என்ன? நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த யுவன், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் கடக்க இஸ்லாம் எனக்கு உதவியது” என்று தெரிவித்துள்ளார்.