பாடசாலைகளில் புலிகளின் கொள்கைகளை ஊக்குவிக்கக் கூடாது! - பாதுகாப்பு அமைச்சு உத்தரவு

ஆசிரியர் - Admin
பாடசாலைகளில் புலிகளின் கொள்கைகளை ஊக்குவிக்கக் கூடாது! - பாதுகாப்பு அமைச்சு உத்தரவு

விடுதலைப் புலிகளின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு வடக்கு மாகாண பாடசாலைகளில் இடமளிக்கக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றை அடுத்து, மூடப்பட்ட பாடசாலைகளில் நாளை முதலாம் கட்டமாக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட நிலையில், பாதுகாப்பு அமைச்சினால், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு கண்டிப்பான அறிவுறுத்தல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைகளை பிரதிபலிக்கக் கூடிய அல்லது அதனை ஊக்கமளிக்கக் கூடிய செயற்பாடுகளுக்கு பாடசாலைகளில இடமளிக்கக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்களுக்கு கடித மூலமும் அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளனர்.

Radio