பாடசாலை மாணவர்கள் வகுப்பறையில் முக கவசம் அணிவது கட்டாயமா..? சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்கள் வகுப்பறையில் முக கவசம் அணிவது கட்டாயமா..? சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விளக்கம்..

பாடசாலைகள் மீள திறக்கப்படவிருக்கும் நிலையில் வகுப்பறையில் மாணவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. என சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெயசிங்க சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட சுகாதார விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையில் அதனை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாடசாலைக்கு வரும் போதும், வெளியேறும் போதும் முகக் கவசம் அணிவது சிக்கல் அல்ல என சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை மாணவர்கள் 6 மணித்தியாலங்கள் 

பாடசாலை நேரத்திற்குள் தினசரி முகக் கவசம் அணிந்தால் வேறு நோய் தொற்று ஏற்படும் என கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வந்த பின்னர் 

தங்கள் முகக் கவசத்தை நீக்கி வேறு ஒரு பாதுகாப்பான துணிக்குள் வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் முக் கவசம் அணிவது கட்டாயமான 

என்பது தொடர்பில் வினவிய போது சுகாதார பணிப்பாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு