இலங்கையில் மீண்டும் கொரோனா..! கொழும்பு- ஜிந்துப்பிட்டியில் ஒரு பகுதியில் 29 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் முடக்கம், 2ம் அலையா..? பீதியில் மக்கள்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் மீண்டும் கொரோனா..! கொழும்பு- ஜிந்துப்பிட்டியில் ஒரு பகுதியில் 29 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் முடக்கம், 2ம் அலையா..? பீதியில் மக்கள்..

இந்தியாவிலிருந்து இலங்கைக்குவந்த ஒருவர் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து வெளியேறிய ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் இலங்கை மக்களை மீண்டும் பீதியில் தள்ளியிருக்கின்றது. 

தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால்மூகத் தொற்றுக் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.ஏனினும் இது சமூகத் தொற்று இல்லை. இது குறித்து மக்கள் அஞசத் தேவையில்லை எனசுகாதார சேவைகள் பணிப்பாளம் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கவை மேற்கோள்காட்டி 

அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இந்த நபர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டபோது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. 

அடுத்த 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தபோதே தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சுகாதார சேவை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

எனவே, மக்கள் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளம் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளானவர் வசித்த தெரு முற்றுமுழுதாக முடக்கப்பட்டு அங்குள்ள 29 குடும்பங்களைச் சேர்ந்த 143 பேர் நேற்றிரவு தனிமைப்படுத்தப்பட்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு