கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் யோசனை ஆபத்தானது..! கொரோனா 2ம் அலை உருவாக வாய்ப்பு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor
சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் யோசனை ஆபத்தானது..! கொரோனா 2ம் அலை உருவாக வாய்ப்பு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..

ஆகஸ்ட் மாதம் தொடக்கம் சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்கும் யோசனை ஆபத்தானது. என சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், கொரோனா 2ம் அலையின் தாக்கம் ஏற்படும் என எச்சரித்துள்ளது. 

சங்கம் இன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.இலங்கையில் கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு உறுதிசெய்துள்ளது. 

எனினும் நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் முற்றாக ஒழிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நாளொன்றிற்கு 8000 சோதனைகளை தொற்றுநோய் பிரிவு மேற்கொள்ளவேண்டும். 

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள்,தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் ,மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் காரணமாக கொரோனா வைரஸ்மீண்டும் பரவலாம். 

ஆகஸ்ட் 1 முதலாம் திகதி முதல் சுற்றுலாப்பயணிகளிற்கு அனுமதி வழங்கும் எண்ணத்தை கைவிடவேண்டும் என தெரிவித்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் இதன் காரணமாக மீண்டும் நோய் பரவல் ஆபத்துள்ளது. 

தேர்தல்காலத்தில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Radio
×