கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்காத அமைச்சர்களுக்கு சிக்கல்..! விடாப்பிடியாக நிற்கும் தேர்தல் ஆணைக்குழு..

ஆசிரியர் - Editor
உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்காத அமைச்சர்களுக்கு சிக்கல்..! விடாப்பிடியாக நிற்கும் தேர்தல் ஆணைக்குழு..

முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்காமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளது. 

ஏனைய இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் நிர்வாகத்தினரை குறித்த இராஜாங்க அமைச்சர்கள் வகித்த அமைச்சுக்களால் பொறுப்பேற்குமாறு 

அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

முன்னாள் இராஜாங்க அமைச்சர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 2 ஆம் திகதியுடன் நிறைடைந்துள்ளதால், 

உத்தியோகபூர்வ வாகனங்களையும் நிர்வாக உறுப்பினர்களையும் தம் வசம் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Radio
×