லீசிங் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் குறித்து 60 முறைப்பாடுகள்..! நாளை மத்திய வங்கிக்கு இறுதி அறிக்கை..
லீசிங் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள், சட்டத்திற்கு மாறான செயற்பாடுகள் தொடர்பாக இதுவரை 60 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக 3 பேர் கொண்ட விசாரணை குழு கூறியுள்ளது.
இதில் பெரும்பாலானவை தனிநபர் முறைப்பாடுகள் எனவும் குழு கூறியுள்ளது.வட்டி தொடர்பிலான முறைகேடுகள், மீண்டும் கையகப்படுத்துதல்,
சட்டவிரோதமாக லீசிங் மற்றும் நிதி நிறுவனங்களை நடாத்திச் செல்லல் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மூவரடங்கிய குழுவினால் முறைகேடுகளை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இதன் அறிக்கையை நாளைய தினம் மத்திய வங்கி ஆளுநரிடம் ஒப்படைப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் லீசிங் நிறுவனங்களின் மோசடிகள் தொடர்பில் ஆராயும் மூவரடங்கிய குழு தெரிவித்துள்ளது.
நிதி மற்றும் லீசிங் நிறுவனங்களின் மோசடிகள் குறித்து ஆராய்ந்து பார்த்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஸ்மனால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.