ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னணி என்ன..? விளக்கமளித்த ஜனாதிபதி பொதுமக்களுக்கு வழங்கிய அறிவுரை..
இலங்கையில் கொரோனா தொற்று சமூக மட்டத்தில் பரவுவது கடந்த 2 மாதங்களாக பூச்சிமாகவே உள்ளது. எனவேதான் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஜனாதிபதி, சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமென அறிவுறுத்தியுள்ளார்.
பொது இடங்களில் முகக்கவசங்களை அணிந்துகொள்ளுங்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி,
பொறுப்பாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் மற்றும் மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள் என மூன்று அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.