105 நாட்களின் பின் பாடசாலைகள் நாளை திறக்கப்படுகிறது..! 6ம் திகதி தொடக்கம் கற்றல் செயற்பாடு, கல்வியமைச்சின் அறிவிப்பு..
இலங்கையில் கொரோனா அபாயம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் 105 நாட்களின் பின் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி கல்வி அமைச்சர் டலஸ் அலஹபெரும மற்றும் குறித்த அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த நாட்களில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நாளைய தினம் பாடசாலை திறக்கப்படுகின்ற போதிலும்
மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் சேவையாளர் மாத்திரம் நாளைய தினம்
பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். எதிர்வரும் ஒரு வாரக்காலப்பகுதியில் பாடசாலைகளை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள்
அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்கள்
கட்டங்கட்டங்களாக பாடசாலைக்கு அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.