சிறையில் உள்ளவர்களுக்கு போதைப் பொருள், தொலைபேசி விநியோகம்..! 5 முகவர்கள் அதிரடியாக கைது..
சிறையில் உள்ள கைதிகளுக்கு கையடக்க தொலைபேசிகள் மற்றும் போதைப் பொருள் விநியோகம் செய்துவந்த முகவர்கள் 5 பேர் வெலிக்கடை, மகஸீன் சிறைச்சாலைகளின் சுற்றுப்புறங்களில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஹெரோயின், ஐஸ் மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்களும் சந்தேகநபர்களால் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பொருட்கள், சிறைச்சாலைகளின் மதிலுக்கு அருகில் இருந்து பல்வேறு முறைகளால் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.இதேவேளை, அனைத்து சிறைச்சாலைகளிலும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சிறைச்சாலைகளின் புலனாய்வு பிரிவிற்கு
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனியா தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் நாளாந்தம் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.